×

முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து நாளை மோதல்

ஆக்லாந்து: இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இந்தியா வென்றது. 3வது போட்டி மழை காரணமாக டை ஆன நிலையில் 1-0 என இந்தியா தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதன் முதல் போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கிறது. இந்திய நேரப்படி நாளை காலை 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்தியா களம் இறங்குகிறது.

சுப்மான்கில், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட், சஞ்சு சாம்சன், தீபக்கூடா ஆகியோருக்கு பேட்டிங்கில் இடம் கிடைக்கும். பவுலிங்கில் ஷர்துல் தாகூர், சாஹல், தீபக் சாகர், குல்தீப் சென் (அல்லது) உம்ரான் மாலிக், அர்ஷ்தீப். சிங் ஆகியோர் இடம் பெறலாம். மறுபுறம் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவன் கான்வே, பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, டாம் லாதம் (வி,கி.), மேட் ஹென்றி ஆகியோர் உள்ளனர். டி.20 தொடரை இழந்த நிலையில் ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் நியூசிலாந்து உள்ளது.

தரவரிசையில் முதல் இடம் பிடிக்க வாய்ப்பு
ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில், தற்போது நியூசிலாந்து 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இந்தியா 112 புள்ளிகளுடன் 3வது, ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 4வது, பாகிஸ்தான் 107 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இநதியா கைப்பற்றினால் முதல் இடத்தை பிடிக்கலாம்.

* இதுவரை நேருக்கு நேர்..
இரு அணிகளும் இதுவரை 110 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 55 போட்டிகளில் இந்தியாவும், 49ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 5 போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் நியூசிலாந்து 4ல் வென்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. ஆக்லாந்து மைதானத்தில் இந்தியா இதுவரை 10 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 4ல் வென்றுள்ளது. இதில் ஒரு போட்டி 2015 உலக கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரு வெற்றியும் அடங்கும் (மற்ற 3 போட்டி நியூசிலாந்துக்கு எதிராக). ஒரு போட்டி டையில் முடிந்த நிலையில், 5ல் நியூசிலாந்து வென்றுள்ளது.

Tags : India ,New Zealand , India vs New Zealand clash in first ODI tomorrow
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!