2001- 02 கல்வியாண்டு முதல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி

சென்னை : 2001- 02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளித்துள்ளது. செமஸ்டர் தேர்வு நடைபெறும் போது தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 3வது செமஸ்டர் தொடங்கி, அதாவது 2ம் ஆண்டு முதல்செமஸ்டர் முதல் அரியர் வைத்திருப்பவர்கள் மீண்டு தேர்வெழுதிக்கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி அரியர் தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக்கட்டணத்துடன் ரூ.5,000 கூடுதலாக செலுத்த வேண்டும் எனவும் இந்த தேர்வுக்கு www.coe1.annauniv.edu என்ற இணையத்தளத்தில் நவ.23ம் தேதி முதல் டிச.3ம் தேதிக்குள்  

விண்ணப்பிக்கலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அரியர் தேர்வெழுதுபவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ள 9 தேர்வு மையங்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: