காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கம்: ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு

சென்னை: காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உத்தரவிட்டார். கடந்த 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் மோதல் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் வகித்து வருகிறார்.

Related Stories: