ரயில்வே நிலையம் சந்திப்பு; நிழற்குடையில் மேற்கூரை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே நிலையம் சந்திப்பு சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையில் மேற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கப்படுகிறது. வாங்கல், நெரூர், மோககனூர், சோமூர், புலியூர், கோயம்பள்ளி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் வரும் அனைத்து வாகனங்களும் மார்க்கெட், ரயில்வே நிலையம் வழியாக கரூர் சென்று வருகிறது. மேலும், ரயில்வே நிலையத்தில் இருந்து கரூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பயணிகளும் இந்த சந்திப்பு பகுதியில் நின்றுதான் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், ரயில்வே சந்திப்பு பகுதியில் பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திப்பு பகுதியில் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்றது. அந்த பணி மேற்கூரை போடப்படாமல் பாதியில் உள்ளது. இதனால், பயணிகள் பயன்படுத்திட முடியாத நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவமழை முடியாத நிலையில், அனைவரின் நலன் கருதி நிழற்குடையின் மேலே மேற்கூரை அமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: