×

தோகைமலை, திருச்சி சாலையோரம் பட்டுப்போன மரங்கள் அகற்றம்: சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு

தோகைமலை: தோகைமலை பகுதியில் உள்ள நெடுஞ்சாலைக்கு சொந்தமான தோகைமலை திருச்சி மெயின் ரோட்டில் பட்டுப்போன மரங்களை தினகரன் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது. இதனால் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டம் தோகைமலை பகுதி வழியாக தமிழக நெடுஞ்சாலைக்கு சொந்தமான தோகைமலை, திருச்சி மெயின் ரோடு உள்ளது. தோகைமலையில் இருந்து திருச்சி பகுதிக்கு செல்லும் இச்சாலை சுமார் 35 கிமீ நீளம் கொண்டது. பழமை வாய்ந்த சாலையின் இருபுறமும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு புளியமரம் மற்றும் வேப்ப மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மரங்கள் சாலையில் செல்லும் இரு சக்கரவாகன ஓட்டிகளுக்கும்இ, நடந்து செல்லுபவர்களுக்கும் நிழலை தருவதுடன், மரங்களில் கிடைக்கும் புளிகள் மூலம் நெடுஞ்சாலைத்துறைக்கு ஆண்டுகள் தோறும் கணிசமான வருமானத்தையும் பெற்று தருகிறது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை இல்லாததால் நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள சில மரங்கள் காய்ந்து போனதால், காய்ந்த மரங்கள் சாலையில் கீழே விழுந்து வருகிறது. தற்போது கடந்த ஆண்டு பெய்த மழைக்கு பட்டுபோன மரங்கள் வளர தொடங்கி உள்ளது. இருந்தபோதும் ஏற்கனவே காய்ந்த நிலையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்து வந்தது. தோகைமலை திருச்சி சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் ஒரு சில இடங்களில் வாகனங்கள் மீது பட்டுப்போன மரங்கள் விழுந்து வாகனங்களை சேதப்படுத்தியும், வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தது.
மேலும் பட்டுப்போன மரங்களின் கிளைகள் முறிந்து கீழே விழுமோ என்ற அச்சத்துடன் ஒவ்வொரு நாளும் வாகன ஓட்டிகள் சென்று வந்தனர்.

இதனால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஆபத்தான நிலையில் உள்ள பட்டுபோன மரங்களை அகற்ற வேண்டும் என்றும், அகற்றிய இடங்களில் புதிய மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்து இருந்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. தினகரன் செய்தி எதிரொலியாக, திருச்சி சாலையில் உள்ள பட்டுப்போன மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் தினகரன் நாளிதழுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

Tags : Thokaimalai ,Trichy roads , Removal of fallen trees along Thokaimalai, Trichy roads: social activists, public praise
× RELATED தோகைமலை அருகே பதுக்கி வைத்து மது விற்ற முதியவர் கைது