புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரி கேள்வி எழுப்பியது. மே மாதத்தில் இருந்தே காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவி நவம்பர் 17ல் உச்சநீதிமன்றம் வழக்கை விசாரிக்க தொடங்கிய பிறகு நிரப்பப்பட்டுள்ளது. 4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்ந்தெடுத்தது எப்படி? என்பது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்க வேண்டும் என நீதிபதி ஜோசப் தெரிவித்தார்.

Related Stories: