சென்னையில் ஓடும் பேருந்தில் கைவரிசை காட்டி வந்த ஆந்திராவைச் சேர்ந்த பிக்பாக்கெட் திருடன் கைது..!!

சென்னை: சென்னையில் ஓடும் பேருந்தில் கைவரிசை காட்டி வந்த ஆந்திராவைச் சேர்ந்த பிக்பாக்கெட் திருடன் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டான். சென்னை அசோக் நகரைச் சேர்ந்த பிரியாணி மாஸ்டர் முகமது மீரான், பாரிமுனை செல்ல பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி முகமது மீரான் கைப்பையில் இருந்த செல்போன் திருடப்பட்டது. செல்போனை திருடிக் கொண்டு ஓட முயன்றவரை முகமது மீரான் மடக்கிப்பிடித்து கூச்சலிட்டார். முகமது மீரான் மற்றும் சக பயணிகள் திருடனுக்கு தர்ம அடி கொடுத்து கே.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

Related Stories: