இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 408 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 408 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 408 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,70,483 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,881- ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,34,001 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30,601 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை மட்டும் 219.88 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Related Stories: