×

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்

சென்னை: ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மநீம தலைவர் கமல்ஹாசன், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு இயக்குனர் விஸ்வநாத்தை சந்திக்க மநீம தலைவர் கமல்ஹாசன் ஐதராபாத் சென்று அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் நேற்று மதியம் சென்னை திரும்பினார்.

இந்நிலையில் நேற்று இரவு கமல்ஹாசனுக்கு லேசான உடல்நலக்குறைவு மற்றும் உடல்சோர்வு ஏற்பட்டதன் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் ஓரிரு நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Kamal Haasan , Kamal Haasan, who was admitted to the hospital due to mild illness, returned home after treatment
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல்...