×

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, விழுப்புரம், தருமபுரி, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் நிலவியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags : Chennai ,Tiruvallur ,Kanchipuram ,Meteorological Department , 13 districts including Chennai, Tiruvallur, Kanchipuram likely to receive moderate rain in next 3 hours: Meteorological Department Information
× RELATED சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்...