பாஜ தலைவர் பதவியில் இருந்து என்னை கூட மேலிடம் மாற்றலாம்: அண்ணாமலை தழுதழுப்பு பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் பதவியில் இருந்து என்னை கூட கட்சி மேலிடம் மாற்றலாம் என அண்ணாமலை தழுதழுத்த குரலில் பேட்டியளித்தார்.

அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:

பாஜவில் இரண்டு நபர்கள் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு குறித்து பேசி இருக்கிறார்கள். இதுகுறித்து, விசாரணை கமிட்டி நாளை(இன்று) திருப்பூரில் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்க உள்ளது. இதில், இரு தரப்பிலும் விசாரணை நடைபெறும்.  பாஜவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களையெடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.  

காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை. தவறு செய்தவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்கான பணி எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் பாஜ என்ற பேருந்தில் மாநில தலைவராக இருக்கக் கூடிய நான் கூட மாற்றப்படலாம் என்றார்.

Related Stories: