திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்: தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின் படி மாநில இளைஞர் அணி செயலாளர்- துணை செயலாளர்கள் கட்சி தலைமையால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி, திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுகிறார். மேலும் இளைஞர் அணி துணை செயலாளர்களாக எஸ்.ஜோயல், ந.ரகுபதி என்ற இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா என்ற பிரதீப்ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மகளிர் அணி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மாநில மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன், இணை செயலாளராக குமரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். துணை செயலாளர்களாக பவானி ராஜேந்திரன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரும், தொண்டர் அணி செயலாளராக ராணி, இணை செயலாளராக தமிழரசி ரவிக்குமார், துணை செயலாளர்களாக சத்யா பழனிக்குமார், ரேகா பிரியதர்ஷினி, விஜிலா சத்யானந்த், மாலதி நாகராஜ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மகளிர் அணி பிரசாரக் குழு செயலாளர்களாக சேலம் சுஜாதா, ராணி ரவிச்சந்திரன், அமலு, மாலதி நாராயணசாமி, தேன்மொழி, உமா மகேஸ்வரி, ஜெசி பொன்ராணி ஆகியோரும், மகளிரணி சமூக வலைதள பொறுப்பாளர்களாக பி.எம்.யாழினி, ரத்னா லோகேஸ்வரன், ரியா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் அணி ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக டாக்டர் காஞ்சனா கமலநாதன், சங்கரி நாராயணன், காரல் மார்க்ஸ், சிம்லா முத்துச் சோழன், சித்ரமுகி சத்தியவானி முத்து, வாசுகி ரமணன், காயத்ரி சீனிவாசன், மலர் மரகதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

Related Stories: