×

ஊர்வலத்துக்கு அனுமதிகோரி ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீடு

ெசன்னை: காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதிக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட், செப்டம்பரில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது. ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த ஐகோர்ட், 6 இடங்களை தவிர்த்து மீதமுள்ள 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாக ஊர்வலம் நடத்தலாம் என்று அனுமதி அளித்தது.

இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் மற்ற அரசியல் கட்சியினரின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளாமலும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் என்று கூறப்பட்டிருந்தது. மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Tags : RSS , Permission to march, RSS Appeal,
× RELATED காவி நிறத்தில் மாறிய தூர்தர்ஷன் லோகோ எதிர்க்கட்சியினர் கண்டனம்