சாலை ஆய்வாளர்கள் கோரிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றிவரும் சாலை ஆய்வாளர்கள் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றிவரும் சாலை ஆய்வாளர்கள் சங்க பிரதிநிதிகள், அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து பல்வேறு சங்க கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

மனுவில் குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளை ஒவ்வொன்றாக, சங்க பிரநிதிகளுடன் விவாதித்து, சில கோரிக்கைகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஒரு குழு அமைக்கப்படும். சில கோரிக்கைகளை பரிசீலித்து ஆவண செய்யப்படும். அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Related Stories: