×

ஏற்றுமதி, சட்டதிட்டம் குறித்து இணையவழி கருத்தரங்கம்: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த இணையவழி கருத்தரங்கம் (3 நாட்கள்)  பயிற்சியினை வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை (மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) வழங்க உள்ளது.

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு  9444556099, 9677152265,  044-22252081, 22252082.என்ற எண்ணில் தொடர் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Export, Bill, E-seminar, Government Notification
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...