அமெரிக்காவில் உள்ள வால்மார்ட்டில் பயங்கரம் 6 பேர் சுட்டுக் கொலை

செசபீக்: அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் செசபீக் பகுதியில் உள்ள வால்மார்ட் வணிக நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு மக்கள் வழக்கம் போல் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதன் மேலாளர் திடீரென ஓய்வறைக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். அங்கிருந்த ஊழியர்கள் உயிர் பிழைக்க ஓடினர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு துப்பாக்கிச்சூடு நடத்திய மேலாளர் உட்பட 6 பேர் இறந்து கிடந்தனர். படுகாயமடைந்த 4 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொலராடோவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதே போல், விர்ஜினியாவில் கடந்த 13ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 கால்பந்து வீரர்கள் பலியாகினர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை பொது இடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Related Stories: