திருப்பதியில் அங்கபிரதட்சண டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அங்கபிரதட்சண டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படும். அதன்படி, வருகிற டிசம்பர் மாதத்தில் அங்கபிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் 25ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பெற்று கொள்ளலாம்’ என அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: