அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு வாழ்த்து

சென்னை: சென்னை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை வருவாய் மாவட்ட எல்லைக்குட்பட்ட சமய அறநிறுவனங்களை தவிர மற்ற சமய அற நிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை மாவட்ட குழுவின் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், உறுப்பினர்களாக வெற்றிவீரன், சாவித்திரி தேவி, விஜய வெங்கடேசன், பாஸ்கர் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பணிகள் குறித்தும், சென்னை மாவட்டத்திலுள்ள பழமையான கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமனம் செய்தல், கோயில்களின் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுப்பட்டது. நிகழ்வில் கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், சென்னை மண்டல இணை ஆணையர்கள் தனபால், ரேணுகாதேவி, உதவி ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: