ஆளுநரை சந்தித்து பொய்களின் மொத்த வடிவத்தை புளுகுமூட்டைகளாக வழங்கியுள்ளார் பழனிசாமி: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: ஆளுநரை சந்தித்து பொய்களின் மொத்த வடிவத்தை புளுகுமூட்டைகளாக வழங்கியுள்ளார் பழனிசாமி என சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலில் பாஜகவின் ஆதரவு பெற அக்கட்சி தலைவர்களை சந்தித்துள்ளார் பழனிசாமி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப ஒரு கருவியாக மாறி பழனிசாமி ஆளுநரை சந்தித்திருக்கிறார் எனவும் அமைச்சர் கூறினார். பாஜக தலைவர்களை சந்தித்த கையேடு ஆளுநரையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். திடீரென ஞானோதயம் வந்ததுபோல் ஆளுநரை எதிர்க்கட்சித்தலைவர் சந்தித்துள்ளார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னையில் பெருமாளை பெய்தபோதும் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்த திமுக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.

முதல்வருக்கு வரும் பாராட்டுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் காந்தாரி எண்ணத்துடன் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்துள்ளார் எனவும் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் வைத்துள்ள புகார்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை பேச பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை என அமைச்சர் பேசியுள்ளார்.

கோவையில் கேஸ் சிலிண்டர் வெடித்து 12 மணிநேரத்திலேயே குற்றவாளி அடையாளம் காணப்பட்டார், ஆனால் எதிர்க்கட்சித்தலைவர் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதுபோல மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார் எனவும் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் 13 பேரை கொன்றவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பேச தார்மீக உரிமை இல்லை எனவும் கூறினார்.

பழனிசாமி முதல்வராக இருந்தபோது நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்தை டிவி பார்த்து தெரிந்து கொண்டதாக கூறினார் என அமைச்சர் கூறினார். மேலும் மருந்து இருப்பு தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார் எனவும் சிறப்பான ஆட்சியின் மூலம் மக்கள் மத்தியில் முதல்வருக்கு பெருகி வரும் ஆதரவு பொறுத்துக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். 

Related Stories: