18 நாட்களுக்குபின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

அம்பை: வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கல்லிடைக்குறிச்சி அருகே ஆண்டுதோறும் தண்ணீர் கொட்டும் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த நவ.5ம்தேதி முதல் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அருவிகளில் வெள்ளம் தணிந்து தண்ணீர் சீராக வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து 18 நாட்களுக்கு பிறகு இன்று (23ம்தேதி) முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா உத்தரவிட்டுள்ளார். ஆனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லை. வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: