குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை: குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உட்பட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னை முன்னாள் காவல் ஆணையர்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் மீதும் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

Related Stories: