போலீசுக்கு எதிராக பொய் புகார் கூறினால் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போலீசுக்கு எதிராக ஆதாரம் இன்றி பொய் குற்றச்சாட்டு கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத ஆதரவற்றோர் இல்லத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்த 7 போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 7 பொலிஸாருக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.35,000 வழக்கு செலவாக வழங்க மனுதாக்கல் கலா, முத்துக்குமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசுக்கு எதிரான குற்றச்சாட்டில் அதன் உண்மை தன்மை பற்றி விசாரித்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பராமரிக்கும் போது ஏராளமான பிரச்சனைகளை போலீசார் சந்திக்கின்றனர் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: