ஆபாச நடனம் ஆடுவதை தடுக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட முடியுமா?.. ஐகோர்ட் கிளை

மதுரை: குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை தடுக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட முடியுமா? என டிஜிபி, பழங்குடியின நலத்துறை இயக்குனரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆபாச நடனமாக எந்த வகை நடனம் ஆடினாலும், அது ஏற்கத்தக்கதல்ல. எந்த சமூகத்தினரும், யாராலும் அவமதிக்கப்படக்கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Related Stories: