பாஜக நிர்வாகியின் குற்றத்தை தெரிந்தே மறைத்த மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்..!!

மதுரை: இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசிய, பாஜக நிர்வாகியின் குற்றத்தை மறைத்த அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தமிழக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா என்பவர் பாஜக சிறுபான்மை அணி தலைவி மருத்துவர் டெய்சியை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஒபிசி சமூகத்தை, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் மீது ஏவி விடுவேன் என்று மிரட்டுவது, சமூகத்தில் இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டும் விதமாக இருப்பதாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எனபவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பெண்களை இழிவாக பேசிய பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா மீதும், குற்றத்தை தெரிந்தே மறைத்த மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: