வீடு முழுவதும் ரத்தக் களரி; பாட்டி, தந்தை, 2 சகோதரிகள் கத்தியால் சரமாரி குத்திக்கொலை: போதை இளைஞர் கைது; டெல்லியில் மீண்டும் பயங்கரம்

புதுடெல்லி: டெல்லியில்  தனது சகோதரிகள், தந்தை மற்றும் பாட்டி ஆகிய 4 பேரையும் குத்திக் கொன்ற போதை வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த கொலை சம்பவத்தால் டெல்லியில் மக்கள் பீதியடைந்துள்ளனர். தலைநகர் ெடல்லியின் பாலம் பகுதியில் வசிக்கும் ஒரு வீட்டில் இரண்டு சகோதரிகள், அவர்களின் தந்தை மற்றும் அவர்களின் பாட்டி உட்பட நான்கு பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘நேற்றிரவு 10.30 மணியளவில் போலீசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றோம். அங்கு ரத்த ெவள்ளத்தில் 4 பேரின் சடலங்கள் கிடந்தன. பாட்டியை படுக்கை அறையிலும், ஒரு சகோதரி மற்றும் அவரது தந்தை குளியலறையிலும், மற்ெறாரு சகோதரி வேறொரு அறையிலும் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தனர்.

4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். சம்பவ இடத்தில் இருந்து கத்தி கைப்பற்றப்பட்டுள்ளது. கொலையாளி குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தனது சகோதரிகள், தந்தை மற்றும் பாட்டி ஆகிய 4 பேரையும் ெகான்றது கேசவ் (25)என்பது தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையான அவரை, தற்போது கைது செய்து விசாரித்து வருகிறோம். எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை காதலியை 35 துண்டுகளாக லிவ்-இன் காதலன் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: