×

மத்திய பிரதேசத்திற்கு ராகுல் வருகை; ஆட்டம் போட்ட காங். மாஜி முதல்வர்: காங்கிரசார் உற்சாகம்

போபால்: மத்திய பிரதேசத்திற்கு ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வதையொட்டி காங்கிரஸ் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், சினிமா பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் தனது நடைபயணத்தை முடித்துக் கொண்டு தற்போது புர்ஹான்பூர் வழியாக மத்திய பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளார்.

ராகுல்காந்தியின் வருகையால் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங், ‘கேசரியா தேரா இஷ்க் ஹை பியா’ என்ற சினிமா பாடலுக்கு ஆட்டம் போட்டார். இவரது ஆட்டத்தை பார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

திக்விஜய் சிங்கின் நடன வீடியோ தற்ேபாது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து திக்விஜய் சிங் வெளியிட்ட பதிவில், ‘இந்திய ஒற்றுமை பயணத்தில் ஒன்றிணைவோம். மத்திய பிரதேசம் உங்களை வரவேற்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.


Tags : Rahul ,Madhya Pradesh ,Atom ,Poda ,Kang ,Maji Chief , Rahul visits Madhya Pradesh; Played Kong. Former Chief Minister: Congress enthusiastic
× RELATED மோசமான வானிலை மபியில் தங்கினார் ராகுல் காந்தி