×

குற்றாலம் பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் விடுதிகளை மூட ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: குற்றாலம் பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் விடுதிகளை மூட ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் உயார்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் ஏராளமான தனியார் விடுதிகள் செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு இன்று  நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம். குற்றால அருவிகளில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டது. செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியார் விடுதிகளை மூட நீதிபதிகள் உத்தரவிட்டனர். செயற்கை நீர்வீழ்ச்சி தொடர்பான அறிக்கைகளை ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் ஆணையிட்டனர். தென்காசி, நெல்லை, கோவை, குமரி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து தனியார் ரிசார்ட்களில் ஆய்வு செய்யவும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் ரிசார்ட்களுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : ICourt ,Courtalam , Courtalam, Artificial Waterfall, Private Hostel, Icourt Branch
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு