×

கரூர் மாவட்டம் நெரூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரைப்பயிர் சாகுபடி

கரூர் : கரூர் மாவட்டம் நெரூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கோரை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.கரூர் மாவட்டம் நெரூர், புதுப்பாளையம், ரெங்கநாதன்பேட்டை, திருமுக்கூடலூர் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இந்த பகுதி விவசாயிகளால் கோரை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.பாய் போன்ற பல்வேறு வகை கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கு கோரை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதால் ஆண்டுதோறும் தமிழகத்தின் பிற மாவட்ட பகுதிகளில் இருந்தும், வெளி மாநில பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து வாங்கிச் சென்று வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக, கோரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், ஆண்டுதோறும் கோரைக்கு நியாயமான விலை கிடைக்க அரசு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.எனவே, இந்த பகுதியில் விளைவிக்கப்பட்டு வரும் கோரைக்கு சரியான விலை கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது இந்த பகுதியினர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

The post கரூர் மாவட்டம் நெரூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரைப்பயிர் சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Karur district ,Nerur ,Karur ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...