சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 56 விளம்பரப் பலகைகள் அகற்றம்..!!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 56 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மண்டல அலுவலரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அகற்றப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களில் 15 மண்டலங்களில்  மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 56 விளம்பரப் பலகைகள் கண்டறியப்பட்டு, அவை மாநகராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு விளம்பரப் பலகைகளை அகற்று பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சென்னை மாநகராட்சி என சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.

Related Stories: