×

குஜராத் தேர்தல் பரப்புரைக்காக சிறுமியை பயன்படுத்திய பிரதமர் மோடி: தேர்தல் விதியை மீறியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

காந்திநகர் : தேர்தல் பரப்புரைக்காக சிறுமியை பயன்படுத்திய பிரதமர் மோடிக்கு எதிராக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக பா.ஜ.க. வெளியிட்ட வீடியோவில் பிரதமர் மோடியின் அருகில் நின்றிருக்கும் சிறுமி ஒருவர் தனது குஜராத்தி மொழியில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், மோடியையும், பா.ஜ.க-வையும் புகழ்ந்து பேசிய சிறுமியின் கழுத்தில் பாஜக-வின் அடையாள சின்னத்துடன் கூடிய துப்பட்டா இருந்தது.

ராமர் கோயில் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அந்த சிறுமி பேசியதை பிரதமர் மோடி அருகில் அமர்ந்து ரசித்து கேட்டுக்கொண்டு இருந்தார். பின்னர் சிறுமி அணிந்திருந்த துப்பட்டாவில் அவர் தனது கையெழுத்து போட்டு வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி சிறுமியை பயன்படுத்தியது தேர்தல் விதி மீறல் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் காங்கிரஸ் சமூக ஊடக பிரிவை சேர்ந்த சுப்ரியா மனு அளித்துள்ளார்.


Tags : Congress ,PM Modi ,Gujarat , Gujarat, Election, Lobbying, Girl, Prime Minister, Congress, Impeachment
× RELATED மக்களவை தேர்தலுக்கு முன் காங்கிரஸ்...