விருதுநகர் மாவட்டத்திற்கென ‘விரு’ தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை வாட்ஸ் அப் எண் அறிமுகம்

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது, ‘‘விருதுநகரில் கடந்த நவ.17 அன்று முதலாவது புத்தக திருவிழா துவக்க விழாவின் போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு இருவரும் இந்தியாவில் முதல்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் விரு(VIRU) தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை தொடர்பான வாட்ஸ் அப் எண் 9488400438 எண் அறிமுகப்படுத்தினார்கள்.

இந்த விரு(VIRU) தகவல் மற்றும் குறைதீர்ப்பு சேவை எண் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அரசு தகவல்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் 9488400438 எண்ணிற்கு ‘HI’ என்று அனுப்புவதன் மூலம் சேவையுடன் தொடர்பு கொண்டால் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சேவைகளாக உங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரினை தேட, புதிய வாக்காளராக பதிவு செய்ய வாக்காளர் பட்டியலில் நீக்கம், இட மாற்றம், திருத்தம் செய்ய, நகல் வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி என பதிவு செய்ய, மின்னணு வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய, உங்களுடைய வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குச்சாவடி நிலை அலுவலரை தெரிந்து கொள்ள, முதல்வரின் தனிப்பிரிவு&முதல்வரின் முகவரி, எங்கிருந்தும் எந்நேரத்திலும் நிலவுடைமை ஆவணங்கள், பட்டா, சிட்ட, அ&பதிவேடு மற்றும் புலப்படம். இணையவழி சான்றிதழ் சேவைகள், முக்கிய உதவி எண்கள், அறிவிப்புகள், திட்டங்கள், செய்தி வெளியீடு. தமிழக அரசுத்துறைகளின் சமூக வலைதள பக்கங்கள், இணையதள முகவரிகள் என சேவைகளின் பட்டியல்கள் காண்பிக்கப்படும்.

அந்த பட்டியலில் தங்களுக்கு தேவையான சேவையின் ஆங்கில வரிசை எழுத்தை உள்ளீடு செய்து தேர்வு செய்து பயன்பெறலாம். சேவையை பொதுமக்கள் 24 மணி நேரமும், எந்த இடத்திலிருந்தும் தங்களது கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

விருதுநகர் மாவட்ட அனைத்து தரப்பு பொதுமக்கள் அனைவரும் விரு(VIRU) தகவல் மற்றும் குறைதீர்ப்பு சேவை தொடர்பான 994884 00438 வாட்ஸ் அப் எண் மூலம் அரசின் சேவைகளை தங்களது இருப்பிடத்தில் இருந்து பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: