முதல்வர் ஜெகன்மோகன் அரசை கண்டித்து திருப்பதியில் வரும் 26ம் தேதி தேசிய மாநாடு-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தகவல்

திருப்பதி : முதல்வர் ஜெகன்மோகன் அரசை கண்டித்து திருப்பதியில் வருகிற 26ம் தேதி தேசிய மாநாடு நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முரளி தெரிவித்துள்ளார்.திருப்பதி பைராகிபட்டிடா பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில மாநாடு போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முரளி தலைமை தாங்கினார்.

அப்போது, அவர் பேசுகையில், ‘கட்டுமான தொழிலாளர் நலனுக்காக மத்திய அரசு கடந்த 1996ல் பார்லிமென்டில் சட்டம் இயற்றி, ஒவ்வொரு கட்டுமான நிறுவனத்திடமும் தலா ஒரு சதவீத வரி வசூலித்து நிதியை ஏற்படுத்தியது. அதிலிருந்து பெறப்பட்ட பணம் தொழிலாளர்களுக்கு முறையாக செயல்படுத்தப்பட்டது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகனின் அரசு ₹1,200 கோடியை பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் அரசு கட்டுமான தொழிலாளர்களின் பக்கம் நின்று புதிய மணல் கொள்கையை கொண்டு வந்து மணல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அனைத்து தொழிலாளர்களையும் வேலையிழக்க செய்துள்ளது.

வருகிற 26ம் தேதி முதல் 28 வரை நடைபெறும் தேசிய மாநாட்டில் மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்துள்ள கொள்கைகள் குறித்து விரிவாக விவாதித்து, கட்டுமான தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்க்கவும், வழிகாட்டுதல்களை வகுத்து முன்னேறவும் இந்த மாநாடுகள் பயனுள்ளதாக இருக்கும். அந்த நோக்கத்தில் ஒவ்வொரு கட்டிட தொழிலாளிகளும் தமது பொறுப்பாக கருதி கடமையுடன் கலந்து கொண்டு 7வது தேசிய மாநாட்டை வெற்றிபெற  செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories: