திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்துள்ளனர். கடந்த 2019 ஜூலை 4-ம் தேதி இளைஞரணி செயலாளராக உதயநிதி தேர்வானார். திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒவ்வொரு அணிக்கு செயலாளர்கள் அறிவித்துள்ளனர். திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இளைஞரணி துணை செயலாளர்களாக ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்து துறை முருகன் அறிவித்துள்ளார். திமுக மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன் நியமனம். திமுக மகளிர் அணி இணை செயலாளராக குமரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிர் அணி துணைச் செயலாளர்களாக பவானி ராஜேந்திரன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளராக ப.ராணி, இணைச் செயலாளராக தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளராக மாலதி நாகராஜ் நியமனம் செய்து துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர்களாக சேலம் சுஜாதா, ராணி ரவிச்சந்திரன், அமலு, மாலதி, தேன்மொழி, உமாமகேஸ்வரி, ஜெசி பொன்ராணி, நாராயணசாமி ஆகியோரை நியமனம் செய்துள்ளனர்.

Related Stories: