×

டிவிட்டர், மெட்டா, அமேசானை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு

கலிபோர்னியா: டிவிட்டர், மெட்டா, அமேசானை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவுகளை குறைக்கும் வகையில் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு  அனுப்பும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளது. மதிப்பீடு அடிப்படையில் ஊழியர்களின் செயல் திறனை அறிந்து குறைவான மதிப்பீடு பெற்றவர்களின் பட்டியலை தயாரித்து வருகிறது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏறத்தாழ 6% பேரை வேலையை விட்டு நீக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஊழியர்கள் பணி நீக்கம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.


Tags : Twitter ,Meta ,Amazon ,Google , Twitter, Meta, Amazon, Google, Employee, Termination, Termination
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு