அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: அண்ணாமலை பேட்டி

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை பாஜக வரவேற்றது. முழுமையாக ஆதரிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி தொடரும். பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி. யாரையும் விடப்போவதில்லை. தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி. சூர்யா சிவா தகாத முறையில் பேசியுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கை கேட்டுள்ளேன். காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை. தவறு செய்தவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: