மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்க அரசாணை வெளியீடு: தமிழ்நாடு அரசு

சென்னை: மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்க அரசாணை வெளியீட்டுள்ளது. ரூ.16.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரங்கபாடியில் 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டையை காண்பித்து ரூ.1000 நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளுள்ளனர். மழை பாதிப்பை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தபடி நிதியுதவி வழங்கப்படுகிறது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்து தாழ்வு நிலை காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக அப்போது சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 44செ.மீ அளவிற்கு மழை பெய்தது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் ஆய்வு செய்த பிறகு, மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதலமைச்சர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மழை நின்று 10 நாட்களுக்கு மேல் ஆகியும் நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் போதாது கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும், அறிவித்த பணத்தை உடனடியாக வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்கா குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி தொகை நாளை முதல் (24.11.2022) அந்தந்த நியாய விலை கடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார். அதன்படி சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களில் உள்ள 239 நியாய விலை கடைகளில் 1,61 647 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: