×

அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு இன்று கலைத்திருவிழா போட்டி தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் கலைத்திருவிழா போட்டி தொடங்கயுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக்கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே கலைத் திருவிழாவின் நோக்கம் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்

அந்த வகையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்பட உள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கலைத் திருவிழா போட்டி அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இன்று  முதல் தொடங்குகிறது.

பள்ளி அளவில் இன்று முதல் 28-ந்தேதி வரையிலும், வட்டார அளவில் 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் 5-ந்தேதி வரையிலும், மாவட்ட அளவில் அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலும், மாநில அளவில் அடுத்த ஆண்டு 2023 ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையிலும் நடக்க உள்ளது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 


Tags : Arts Festival Competition for Students in Government Schools , Arts festival competition starts today for students in government schools: School Education Department announcement
× RELATED ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி...