சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாக மீனாகுமாரி பொறுப்பேற்பு

தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குனராக இருந்த டாக்டர் மீனாகுமாரி, டைரக்டர் ஜெனரலாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். தாம்பரம், சானடோரியம் பகுதியில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் அமைந்துள்ளது. இதில், டைரக்டர் ஜெனரலாக டாக்டர் கனகவல்லி பதவி வகித்தார். இந்நிலையில், அவரது விருப்பத்தின்பேரில், மீண்டும் மாநில அரசு சித்த மருத்துவ பணியிடத்திற்கு திரும்பியதின் காரணமாக, சானடோரித்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் புதிய டைரக்டர் ஜெனரலாக டாக்டர் மீனாகுமாரியை ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் நியமனம் செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனராக இருந்த டாக்டர் மீனாகுமாரிக்கு, கூடுதல் பொறுப்பாக டைரக்டர் ஜெனரலாக நேற்று பதிவேற்றுக் கொண்டார். ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் சித்த மருத்துவத்திற்காக, இரு பெரும் நிறுவனங்களாக, சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒன்றிய சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகமும், சித்த மருத்துவ உயர் கல்விக்காக தேசிய சித்த மருத்துவ நிறுவனமும், இயங்கி கொண்டிருக்கின்றன. இந்த, 2 நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒரே தலைமையாக டாக்டர் மீனாகுமாரி பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும்.

Related Stories: