×

மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் அரசு பள்ளிகளில் கலை திருவிழா: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: ‘‘மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் அரசு பள்ளிகளில் கலை திருவிழா நடைபெறும்’’ என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிகொணரும் விதமாகவும் பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே கலைத் திருவிழாவின் நோக்கமாகும். மேலும், மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்பட உள்ளது.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் பங்கேற்கும் கலைத்திருவிழா நிகழ்வுகள் நடைபெறு உள்ளது. இதில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளி அளவில் 23ம் தேதி (இன்று) முதல் 28ம் தேதிக்குள்ளும், வட்டார அளவில் வருகிற 29ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதிக்குள்ளும், மாவட்ட அளவில் டிசம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதிக்குள்ளும், மாநில அளவில் ஜனவரி 3ம் தேதி முதல் ஜனவரி 9ம் தேதிக்குள்ளும் கலைத்திருவிழா நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலம், அம்பத்தூர் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளரை  9444212244 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம். பூந்தமல்லி  போக்குவரத்து காவல் ஆய்வாளரை 9600009159 என்ற எண்ணிலும்  தொடர்பு கொள்ளலாம். ஆவடி கட்டுப்பாட்டு அறையை 7305715666 என்ற எண்ணிலும்  தொடர்பு கொள்ளலாம் அல்லது சட்டம் ஒழுங்கு ஆவடி கட்டுப்பாட்டு அறையை 044-26378100 என்ற எண்ணிலும், ஆவடி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை 044-26379100 என்ற  எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்  தங்கள் ஆலோசனைகளை ட்விட்டர் http:/twitter.com/avadipolice மூலம் ஆவடி  காவல் ஆணையரகத்திற்கு பதிவு செய்யலாம்.

Tags : Chennai ,Collector Information , Artistry of Students, Art Festival in Govt Schools, Chennai Collector Info
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...