×

மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக பூந்தமல்லியில் போக்குவரத்து மாற்றம் பிப்ரவரி 11ம் தேதி வரை நீட்டிப்பு: காவல் ஆணையர் தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்காக பூந்தமல்லி பகுதியில் அமலில் உள்ள போக்குவரத்து மாற்றம் வரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சென்னை  பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் - பூந்தமல்லி பைபாஸ் சாலை வரை  2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்  தற்போதுள்ள போக்குவரத்து முறையில் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் பின்வரும்  தற்காலிக போக்குவரத்து மாற்றம் 22-11-2022 முதல் 11-02-2023 வரை பகல்  மற்றும் இரவு முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.
இதில், பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை  பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலிருந்து சென்னை  நோக்கி வரும் வாகனங்கள் பூந்தமல்லிக்கு முன்பாக சென்னை வெளிவட்ட சாலை  வழியாக இடதுபுறம் திரும்பி, மீஞ்சூர் நோக்கி சென்று, வழக்கமாக  சென்னை வெளிவட்ட சாலையின் சர்வீஸ் சாலையில் இடதுபுறம் திரும்பி செல்கின்றன. அவ்வாறு வரும் வாகனங்கள் வழக்கமாக இடதுபுறம் திரும்பும் இடத்தில்  திரும்பாமல், இனி மெயின் ரோட்டிலேயே அங்கிருந்து 200 மீட்டர் தாண்டிச்  சென்று இரண்டு வெளிவட்ட சாலை பாலங்களுக்கு இடையில் உள்ள சாலை வழியாக இடதுபுறமாக செல்ல வேண்டும்.

சென்னை வெளிவட்ட சாலையில் வண்டலூர் பக்கமிருந்து  வரும் அனைத்து வாகனங்களும் தற்போது பூந்தமல்லி நசரத்பேட்டை அருகில்  இடதுபுறம் திரும்பி, சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடைந்து  பூந்தமல்லி நோக்கி செல்கின்றன. அந்த வாகனங்கள், பூந்தமல்லி நசரத்பேட்டை  அருகில் சென்னை வெளிவட்ட சாலை பாலத்திலிருந்து இடது புறம் திரும்பாமல்,  இனி, சென்னை வெளிவட்ட சாலையிலேயே நேராக சென்று கோலப்பன்சேரி  சுங்கச்சாவடிக்கு முன்பு வலதுபுறமாக “யூ” டர்னில் திரும்பி, சென்னை  வெளிவட்ட சாலையிலேயே பூந்தமல்லி பைபாஸ் பகுதி வரை வந்து, பின்னர் பெங்களூரு  சென்னை தேசிய நெடுஞ்சாலையினை அடைந்து தாங்கள் சென்று சேர வேண்டிய  இடங்களுக்கு சென்றடையலாம்.

மேற்படி மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும்,  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை ஆவடி போக்குவரத்து  காவல் துணை ஆணையாளரின் dcpavadi.traffic@gmail.com  என்ற  இணையதள முகவரிக்கும், கட்டுமான பணி அதிகாரியின் இணையதள முகவரியான  sundramoorthyn@kecrpg.com  என்ற இணையதள முகவரிக்கும்  அனுப்பலாம்.

மேலம், அம்பத்தூர் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளரை  9444212244 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம். பூந்தமல்லி  போக்குவரத்து காவல் ஆய்வாளரை 9600009159 என்ற எண்ணிலும்  தொடர்பு கொள்ளலாம். ஆவடி கட்டுப்பாட்டு அறையை 7305715666 என்ற எண்ணிலும்  தொடர்பு கொள்ளலாம் அல்லது சட்டம் ஒழுங்கு ஆவடி கட்டுப்பாட்டு அறையை 044-26378100 என்ற எண்ணிலும், ஆவடி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை 044-26379100 என்ற  எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்  தங்கள் ஆலோசனைகளை ட்விட்டர் http:/twitter.com/avadipolice மூலம் ஆவடி  காவல் ஆணையரகத்திற்கு பதிவு செய்யலாம்.

Tags : Poontamalli ,Commissioner , Metro rail project work, traffic diversion in Poontamalli, police commissioner information
× RELATED துப்பாக்கி ஏந்திய போலீஸ்...