சீனாவில் தீ: 38 பேர் பலி

பீஜிங்:  சீனாவில் வர்த்தக நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் பயங்கர தீ விபத்தில் 38 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள வர்த்தக நிறுவனத்தின் ஆலையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அதில் இருந்தவர்கள் தீயில் சிக்கி அலறினர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

இதில், 63 தீயணைப்பு வாகனங்கள், 240 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 4 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 38 பேர் பரிதாபமாக கருகி பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: