வடகொரியா ஏவுகணை சோதனை ஐநா.வில் இந்தியா, 11 நாடு கண்டனம்

நியூயார்க்: வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஐநா.வில் இந்தியா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள், எதிர்ப்புகளையும் மீறி அந்நாடு தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது. கடந்த 18ம் தேதி அந்நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை

செய்தது. இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஐநா.வில் அமெரிக்கா உட்பட 12க்கும் மேற்பட்ட நாடுகள் வடகொரியாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவும் இதில் இணைந்துள்ளது. கடந்த திங்களன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூடியபோது, ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசுகையில், ‘வடகொரியாவின் அணுசக்தி, ஏவுகணை தொழில்நுட்பத்தின் பெருக்கம் கவலைக்குரிய விஷயமாகும்.

அவை இந்தியா உட்பட பல்வேறு பிராந்தியங்களின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும். வடகொரியா மீதான தீர்மானங்களை ஐநா பாதுகாப்பு கவுன்சில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டவும், அணு ஆயுத ஒழிப்புக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது,” என்றார்.

Related Stories: