தமிழக செய்தித்துறையில் பணியாற்றும் பிஆர்ஓக்கள் 8 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: செய்தித்துறையில் பணியாற்றும் 8 பிஆர்ஓக்கள் உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பதவி உயர்வில் எந்த காலதாமதமும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதேபோல செய்தித்துறையில் பணியாற்றி வந்த 7 உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்களாகவும், 4 துணை இயக்குநர்கள் இணை இயக்குநர்களாகவும் சமீபத்தில் பதவி உயர்வு பெற்றனர். அதேபோல தற்போது 8 பிஆர்ஓக்களுக்கு உதவி இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், தர்மபுரி மாவட்ட பிஆர்ஓவாக உள்ள அண்ணாதுரை, தலைமைச் செயலக மேற்கோள் பிரிவு உதவி இயக்குநராகவும், நாமக்கல் மாவட்ட பிஆர்ஓ சீனிவாசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக உதவி இயக்குநராகவும், மதுரை பிஆர்ஓ இசாலி தளபதி, திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி இயக்குநராகவும், வள்ளுவர்கோட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கமலா, தலைமைச் செயலகம் பணி அமைப்பு உதவி இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழரசு அலுவலக பிஆர்ஓ தீபா, திரைப்படத்துறையினர் நல வாரிய உதவி இயக்குநராகவும், செங்கல்பட்டு பிஆர்ஓ சிவகுரு, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநராகவும், செய்தித்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் நந்தகுமார், அதே பிரிவில் உதவி இயக்குநராகவும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை பிஆர்வு கலையரசன், அதே பிரிவில் உதவி இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Related Stories: