×

 தமிழக அரசு சார்பில் மகளிருக்கான யுபிஎஸ்சி பயிற்சி வகுப்புகள்: டிசம்பர் 1ம் தேதி நுழைவு தேர்வு

சென்னை: தமிழக அரசு சார்பில், நடப்பாண்டில் மகளிருக்கான யுபிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் ராணி மேரி மற்றும் மதுரை  மீனாட்சி கல்லூரிகளில் நடைபெற உள்ளது. தமிழக அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் இணைந்து மகளிருக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன. அதன்படி நடப்பாண்டுக்கான பயிற்சி வகுப்புகள்  ராணி மேரி மற்றும் மதுரை  மீனாட்சி கல்லூரிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி www.queenmaryscollege.edu.in, www.smgacw.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவம்பவர் 24ம் தேதிக்குள் அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளங்களையில் ஏதேனும் பட்டம் பெற்ற மாணவிகள் இதில் கலந்து கொண்டு பலனடையலாம்.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பயிற்சி வகுப்புகளை ராணிமேரி கல்லூரி அல்லது மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் பெறலாம். தேர்வர்கள் தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே வகுப்புகள் நடைபெறும்.
தற்போது ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 20ம் தேதியில் இருந்து 24ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து  டிசம்பர் 1ம் தேதியன்று (முற்பகல் 10.30 முதல் 12.30 மணி வரை) அன்று தேர்வு நடைபெற உள்ளது. இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்போர் வயது வரம்பு பொருத்தவரை 14.11.2022 அன்று 21 வயதுக்கு மேலும், 32 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். பட்டியல் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரங்களுக்கு வயது வரம்பு 35 ஆகவும், பிறப்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை கல்லூரியின் இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Tags : Tamil ,Nadu Govt ,UPSC , Tamil Nadu Govt UPSC Coaching Courses for Girls: December 1st Entrance Exam
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற...