கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 6 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை: கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் அதிகாலையில் கார் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில், ஜமேஷா முபின் (28) என்பவர் பலியானார். இந்த, வழக்கு தொடர்பாக முகமது அசாரூதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேரை கைது செய்தனர். கைது, செய்யப்ட்ட 6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் கடந்த 8ம்தேதி ஆஜர்படுத்தினர். அப்போது, 6 பேரையும் நவம்பர் 22ம்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். இதையடுத்து, 6 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களை கருதி 6 பேரை கோவை சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து, நேற்று மாலை 6 பேருக்கும் டிசம்பர் 6ம்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

Related Stories: