மயிலாடும்பாறை கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்; புதிய கட்டிடம் கட்டித் தர கோரிக்கை

வருசநாடு: மயிலாடும்பாறை கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. எனவே இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறை கிராமத்தில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த அலுவலகத்திற்கு மின் கட்டணம் மற்றும் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க பொதுமக்களும், விவசாயிகளும் வந்து செல்கின்றனர். தற்போது கடமலை-மயிலை ஒன்றியத்தில் ெபய்து வரும் சாரல் மழையால் கட்டிடத்தில் சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கியுள்ளது.

இந்த மின்சார வாரிய அலுவலகம் எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். இதுகுறித்து கிராம பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக மின்சார வாரிய கட்டிடம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் எப்பொழுது இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே புதிதாக மின்சார வாரிய கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்றனர்.

Related Stories: