×

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 2023ம் ஆண்டு பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது தமிழக முதலமைச்சரால் உலக மகளிர் தினமான மார்ச் 2023ல் வழங்கப்பட உள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல்வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல்வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் புகைப்படம், சேவையை பாராட்டிய பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை மற்றும் சமூக பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று பெற்று 10.12.2022க்குள்  https://awards.tn.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் கருத்துருவினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து மாவட்ட சமூக நல அலுவலகம், (குறுவள மையக் கட்டிடம்), ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், ஆலப்பாக்கம், செங்கல்பட்டு என்ற முகவரியில் 3 பிரதிகளை நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Tags : Chengalpattu , Applicants can apply for the award; Chengalpattu Collector's Report
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!