காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் புறக்கணிப்பு: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் புறக்கணிப்படுவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார். தமிழறிஞர்களுக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்துவிட்டு காசி தமிழ் சங்கமம் நடத்தப்படுவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர்  வெளியீட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பாரம்பரிய தொடர்பை நிறுவும் வகையில்  ஒன்றிய அரசு நடத்தும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் உள்ள முழுபெறும் தமிழறிஞர்கள் எவருக்கும் அழைப்பு கொடுக்கப்படமால் முழுக்க முழுக்க பாஜக நிர்வாகிகளை கொண்டு கட்சி நிகழ்ச்சி போல நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருக்குறள் அரபி மொழிப்பெயர்ப்பு நூலை பிரதமர் நரேந்திரமோடி வெளியிடுவதாக சொல்லப்படும் நிலையில் மொழிப்பெயர்ப்பு செய்த முனைவர் பஷீர் அகமதுவிற்கு அழைப்பு விடுக்காதது ஏற்புடையது அல்ல என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

நீண்ட நெடிய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், வளத்தையும் கொண்ட தமிழை வளர்ப்பதற்கு ஆக்க பூர்வமான முன்னெடுப்புகளை செய்யாமல் அரசியல் செய்யும் பாஜகவின் செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Related Stories: