பால் விலை உயர்வை கண்டித்து 24ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலையை உயர்த்தியது. இதனால் பொது மக்கள் குறிப்பாக சாதாரண நடுத்தர மக்களும், அவ்வப்போது ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை வாங்க நேரிடும் ஏழை, எளிய மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே பால் விலை உயர்வை கண்டித்து எனது தலைமையில் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, ராஜாஜி சாலை, மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தமாகா தலைவர்களும், மாநில மாவட்ட நிர்வாகிகளும், துணை அமைப்பினரும் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டு பால் விலையைக் குறைக்க தமிழக அரசை வற்புறுத்துவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: