×

உலக கோப்பை கால்பந்து அமெரிக்கா-வேல்ஸ் அணி ஆட்டம்; டிரா செனகலை வீழ்த்தியது நெதர்லாந்து

தோகா:கத்தாரில் நடைபெற்று வரும் 22வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டாவது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் கலிபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற குரூப்-பி முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 6-2 என அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு நெதர்லாந்து-செனகல் அணிகள் மோதின. அல் துமாமா மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் இல்லாமல் 0-0 என்ற கணக்கில் இருந்தது. ஆட்டம் சமனில் முடியும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் ஆட்டத்தில் 84வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் கோடி காக்போ கோல் அடித்து அசத்தினார். இதனால் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து கூடுதல் நேரத்தில் நெதர்லாந்து அணி மேலும் ஒரு கோல் அடிக்க அந்த அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியில் காக்போ, டேவி கிளாசென் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த 3வது போட்டியில் அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே அமெரிக்க அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் அந்த அணியின் திமுதி வியா கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து முதல் பாதியில் அமெரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து ஆட்டத்தின் 2 வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமெரிக்கா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி வேல்ஸ் வீரர் பாலே அபாரமாக பந்தை லாவகமாக அடித்து கோல் அடித்தார். இதையடுத்து கோல் அடிக்க இரு அணி வீரர்களும் கடும் முயற்சி எடுத்தும் பலன் கிட்டவில்லை. இதனால் இறுதியில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

Tags : World Cup Soccer ,USA ,Wales ,Netherlands ,Senegal , World Cup Soccer USA-Wales match; Netherlands beat Senegal in draw
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!